அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
இந்திய அளவில் பிரபலமான சமையல் கலைஞராக வளர்ந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்தும் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் தற்போது மேலும் பிரபலமாகியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ், அண்மையில் தனது வாழ்க்கை பயணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், 'சிறுவயதில் பள்ளி சீருடை கூட எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பல நாட்கள் சீருடை அணியாமல் சென்று முட்டி போட்டிருக்கிறேன். இன்று விலையுயர்ந்த விதவிதாமன ஷூ, கார் எல்லாம் வாங்குகிறேன். சிறுவயதில் எதையெல்லாம் தேவையில்லை என்று நினைத்தேனோ அதையெல்லாம் வாங்கி பயன்படுத்துகிறேன். இன்று நான் இவ்வளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் சிறுவயதில் ஏற்பட்ட ஆசை தான்.
சிறுவயதில் என் பள்ளிக்கு அருகில் சினிமா ஷூட்டிங் நடந்தது. அதில் நெப்போலியனும் சுகன்யாவும் கலந்து கொண்டனர். அப்போது பலரும் சென்று நெப்போலியனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். எனக்கும் அன்புடன் நெப்போலியன் என்று அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அன்று அவரை சுற்றி பலரும் நின்றது போல் என்னைச் சுற்றியும் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது' என்று கூறியுள்ளார்.