சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் |

பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் (வயது 73), உடல்நலக் குறைவால் காலமானார். ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. அவர், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(டிச., 16) காலை ஜாகிர் உசேன் காலமானார். அவரது மறைவினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சிறுவயது முதலே மஹாராஷ்டிராவில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சிறந்த இசை சேவைக்காக மத்திய அரசின் பத்மபூஷண், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார் ஜாகிர் உசேன்.
1951ல் புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவாவுக்கு மும்பையில் மகனாக பிறந்த உசேன், தனது தந்தையால் மூன்று வயது முதலே தாள வாத்தியத்திற்கு அறிமுகப்படுத்தபட்டார். தொடர்ந்து உலகம் முழுக்க தனது தபேலா மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த ஆண்டு, பேலா ப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சவுராசியா ஆகியோருடன் பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி உட்பட மூன்று கிராமி விருதுகளை வென்றார்.