ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். நீண்டகாலமாக தனது பள்ளி காலம் முதல் நண்பராக இருந்து வரும் ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வந்தார் கீர்த்தி. இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் டிச., 12ல் கோவாவில் திருமணம், இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆண்டனி கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பவதால் கிறிஸ்துவ முறைப்படியும் இவர்களின் திருமணம் நடந்துள்ளது. இதுதொடர்பான போட்டோக்களை கீர்த்தி வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் கீர்த்தி - ஆண்டனி இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த போட்டோவும் உள்ளது. அதன் உடன் மோதிரம் மாற்றிக் கொண்ட போட்டோ, திருமண கொண்டாட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.