வதந்தி வெப் தொடர் 2ம் பாகத்தில் சசிகுமார்? | ஜனநாயகன் படத்துடன் வெளியாகும் இரு படங்கள் | மனோஜ் பாரதி உடல் தகனம் : அரசியல் தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி | மூக்குத்தி அம்மன் 2 ; சுந்தர்.சி, நயன்தாரா மோதலா? : குஷ்பூ வெளியிட்ட தகவல் | பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் | ஜேசன் சஞ்சய் படத்தின் கதாநாயகி இவரா? | சமந்தாவின் நிறைவேறாத ஆசை | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் | புஷ்பா 2 இயக்குனருக்கு இப்படி ஒரு மகளா? ஓடிடி-யில் கலக்கும் படமாக இருக்குமா |
ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‛வேட்டையன்'. கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படத்திற்கு எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதித்தது.
இதுபற்றி ஞானவேல் அளித்த ஒரு பேட்டியில், ‛‛சினிமா படத்திற்கான நியாயமான விமர்சனங்கள் குறைந்துவிட்டன. வேட்டையன் படம் மோசம் என முதல்நாளில் இருந்தே சொல்ல ஆரம்பித்தனர். இதனால் படம் பார்ப்பவர்கள் மனநிலையும் அப்படி மாறிவிடுகிறது. அந்தவகையில் வேட்டையன் படத்திற்கு கள்ளிப்பால் கொடுத்து விட்டனர். படத்தில் நடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை குறை கூற வேண்டும் என்ற நோக்கில் தான் இப்போது விமர்சனங்களை முன் வைக்கின்றனர்'' என தெரிவித்துள்ளார்.