இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. திருமணம், குழந்தைகளுக்கு பிறகு முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமா தாண்டி ஹிந்தியிலும் நடிக்கிறார். தற்போது இவர் கைவசம் டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி உள்ளிட்ட அரை டஜன் படங்கள் வரிசை கட்டி உள்ளன.
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ராஜா சாப்' எனும் படத்தில் நயன்தாரா சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடைபெறும் என்கிறார்கள். நயன்தாரா இதற்கு முன்பு சிவாஜி, எதிர்நீச்சல் ஆகிய படங்களில் மட்டுமே சிறப்பு பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.