கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி |

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனாவுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவருக்கு 15 வயதில் சாரா என்ற மகளும் இருக்கிறார். அர்ச்சனா, மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டாக்டர் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். தற்போது இருவரும் செலிபிரேட்டியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் அர்ச்சனா தன் மகளுடன் சேர்ந்து அளித்த பேட்டியில் தன் காதலை மீட்டெடுக்க சாரா உதவியதை கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த பேட்டியில் 'ஒரு மாதத்திற்கு முன் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். அப்போது எங்கள் மகள் தான் இருவரையும் உட்கார வைத்து பேசினாள். நீங்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியுமா? என்று கேட்டாள். அதன்பின் நாங்கள் எங்கள் தவறை உணர்ந்தோம். தற்போது மீண்டும் கடந்த 15 நாட்களாக 20 வருடங்களுக்கு முன் எப்படி காதலித்தோமோ அப்படி காதலித்து வருகிறோம்' என்று கூறியுள்ளார். வைரலாகும் இந்த பேட்டியை பார்க்கும் பலரும் பெற்றோரை மீண்டும் சேர்த்து வைத்த சாராவின் மெச்சூரிட்டியை பாராட்டி வருகின்றனர்.