துபாய் தொழிலதிபருடன் அனுஷ்காவுக்கு திருமணமா? | சினிமா மாறினாலும், சிவாஜியின் நடிப்பு மாறாது : கமல் புகழாரம் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' படத்தில் 7 மாநிலங்களின் இசைக்கருவிகள்! | ‛நடிப்பு சக்கரவர்த்தி' சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் : முதல்வர் மரியாதை | நடிகர் சித்திக்கிற்கு இடைக்கால ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு | காந்தாரா 2வில் முக்கிய வேடத்தில் மோகன்லால்? | 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த டொவினோ தாமஸின் ஏஆர்எம் | நடிகர் பாலாவின் முதல் திருமண சான்றிதழை சோசியல் மீடியாவில் லீக் செய்த பெண் | தமிழக பெண் இசையமைப்பாளர் ஜனனிக்கு 6 விருதுகள் | நாகசைதன்யா - சாய்பல்லவி படத்திற்காக ரூ.4 கோடி செலவில் படமாக்கப்பட்ட மகா சிவராத்திரி பாடல் |
நடிகர் திலகம் சிவாஜியின் 97வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது ரசிகர் மன்றத்தினர் ஏராளமான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு, துஷ்யந்த் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு கமல் வெளியிட்டுள்ள பதிவில், “காலங்கள் மாறலாம், தொழில் நுட்பங்கள் கூடலாம், சினிமாவின் முகமே மாற்றத்துக்கு இலக்காகியிருக்கலாம். ஆனால், நடிப்புக் கலையின் உச்சம் என்பது எப்படி இருக்கும் என்று காட்டிய மாபெரும் கலைஞன் சிவாஜி சாரின் பங்களிப்பு மறக்கவொண்ணாதது. பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்து காட்டிய வரை பிறந்தநாளில் வணங்குகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.