1400 கி.மீட்டரை 12 மணி நேரத்தில் கடந்த 'எம்புரான்' படக்குழு ; பிரித்விராஜ் பாராட்டு | மெய்யழகன் படத்திற்கு முதலில் ஒப்பந்தமானவர் பி.சி ஸ்ரீராம் ; தயாரிப்பாளர் புது தகவல் | ‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் |
பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து அவர்கள் இருவருமே நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதையடுத்து அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வருவதாகவும், அவரது ஜாதகத்தில் தோஷங்கள் இருப்பதால் பல கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. இதன் காரணமாக மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா திருமணம் செட் ஆகாததால், மீண்டும் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலி ஷெட்டி' என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது 'காட்டி' மற்றும் ஜெயசூர்யா- பிரபுதேவா இணைந்து நடிக்கும் 'கத்தனார் தி வைல்ட் சோர்சரர்' என்று படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது 42 வயதாகும் அனுஷ்கா விரைவில் ஒரு துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், டோலிவுட் ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.