‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
'சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, ராயன்' என பல படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். தற்போது ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'வேட்டையன்' படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் நிலையில் பல மீடியாக்களில் தோன்றி அப்படம் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறார் துஷாரா விஜயன்.
இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்பை முடித்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்துவரும் ரஜினிகாந்த், திடீர் உடல்நிலை பிரச்னை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்த அனுபவம் பற்றி துஷாரா விஜயன் கூறியதாவது: 73 வயதில் ரஜினியின் எனர்ஜி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். இப்போதுவரை சினிமா மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் அவரது எளிமையும் பணிவும் வியப்பை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அவர் இருக்கும் இடத்திற்கு நாம் சென்றால் உடனே இருக்கையில் இருந்து எழுந்து நிற்பார். அந்த இடத்திற்கு நமக்கும் சேர் கொண்டு வந்து போடப்பட்டு நாமும் உட்காரும்போது தான் அவரும் உட்கார்ந்து பேசுவார். அந்த அளவுக்கு இளம் நடிகர் நடிகைகளையும் மதிக்கக்கூடிய ஒரு மாபெரும் கலைஞராக இருக்கிறார் ரஜினிகாந்த். இவ்வாறு கூறியுள்ளார் துஷாரா விஜயன்.