டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

பிரபல பாலிவுட் நடிகை ஜாரா. ஐயர்ன் மங்க், தி பைட் ரூம், ஆக்சிடண்ட் மேன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் கடைசியாக டாக்டர் ஸ்ரேன்ஜ்சர் படத்தில் நடித்திருந்தார். ஜாரா நடிகை என்பதோடு தற்காப்பு கலை பயிற்சியாளர். தனியாக பயிற்சி மையம் நடத்தி வருகிறார். பல படங்களில் சண்டை பயிற்சியாளராகவும் பணியாற்றி உள்ளார். இவரது கணவர் விக்டர் மர்க்லே.
தனது பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வந்த 13 வயது சிறுமிக்கு ஜாராவும், அவரது கணவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நாட்டிங்காமில் உள்ள கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்ததது.
தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகை ஜாராவுக்கு 8 ஆண்டுகளும், அவருடைய கணவருக்கு 14 ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.