புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ஓடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாத்துரை தயாரிக்கும் படம் துடிக்கும் கரங்கள். 1983ம் ஆண்டு ரஜினி நடித்த படத்தின் டைட்டில் இது. இதில் ரஜினி, ராதா, ஜெய்சங்கர், சுஜாதா நடித்திருந்தார்கள். சி.வி.ஸ்ரீதர் இயக்கி இருந்தார். கேஆர்ஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்போது இதே தலைப்பில் விமல் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வேலுதாஸ் இயக்கி உள்ளார்.
படம் குறித்து இயக்குனர் வேலுதாஸ் கூறியதாவது: இந்தப்படத்தில் யூடியூப் சேனல் நடத்தும் நிருபராக விமல் நடித்துள்ளார். அவரது நண்பராக சதீஷ் நடித்துள்ளார். ஒரு நிருபர் தன் வேலையை செய்கிறார். அதனால் அவருக்கு மிகப்பெரிய இடத்தில் இருந்து ஏற்படும் எதிர்ப்பு மற்றும் பிரச்சனைகளை எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் என்பதுதான் இந்தப்படத்தின் கதை.
இதுவரை நகரத்து இளைஞனாக அதிகம் நடித்திராத ஒருவர் நடித்தால், அந்த கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால், இந்த படத்திற்கு ஹீரோவாக விமலை தேர்வு செய்தோம். பிரபல இசையமைப்பாளர் மணிசர்மாவின் நிழலாகவே, அவருடன் 23 வருடங்கள் உதவியாளராக பணியாற்றிவரும், அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்தப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். என்கிறார்.