‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து | சிம்பு பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்! | ராம் கோபால் வர்மா கம்பேக் தருவாரா? | ‛ஜனநாயகன்' படத்தின் செகண்ட்லுக் போஸ்டர்: குஷியான ரசிகர்கள் | சவால் விடும் தாரா நடிகை | பத்மபூஷன் - சீனியர் நடிகர்களுடன் இணைந்த அஜித் | சர்ச்சை பேச்சு: பகிரங்க மன்னிப்பு கேட்ட மிஷ்கின் |
நடிகர் சஞ்சீவ், சின்னத்திரையில் பல ஆண்டுகள் முன்னணி நடிகராக வலம் வந்தார். தொலைக்காட்சி தொடர்களில் 2002-ல் அறிமுகமான சஞ்சீவ் கடைசியாக 2018-ல் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி தொடரில் தொடக்கத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக சின்னத்திரை பக்கம் தலைகாட்டாத சஞ்சீவ், ராடன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'கிழக்கு வாசல்' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தொடரில் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகர், ராதிகா, ரேஷ்மா, அஸ்வினி ஆகியோர் நடித்து வரும் நிலையில் சஞ்சீவின் என்ட்ரி தொடருக்கு மேலும் பாசிட்டிவாக அமையும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது.