லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா சஞ்சீவ் இன்று (அக்.,20) காலை காலமானார். உடல்நலக் குறைவால் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடல் ஜே.பி.நகரில் உள்ள சுதீப்பின் இல்லத்திற்கு நண்பகலில் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவருக்கு வயது 86.
இதனை அறிந்த கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், சுதீப் மற்றும் சரோஜாவின் படத்தை வெளியிட்டு, “நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் திருமதி சரோஜா காலமான செய்தி கேட்டு மனம் உடைந்தேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன், இந்த இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் சுதீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கட்டும். ஓம் சாந்தி.” எனப் பதிவிட்டுள்ளார்.