ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான அர்ச்சனாவுக்கு திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவருக்கு 15 வயதில் சாரா என்ற மகளும் இருக்கிறார். அர்ச்சனா, மகள் சாராவுடன் சேர்ந்து சூப்பர் மாம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டாக்டர் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். தற்போது இருவரும் செலிபிரேட்டியாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்மையில் அர்ச்சனா தன் மகளுடன் சேர்ந்து அளித்த பேட்டியில் தன் காதலை மீட்டெடுக்க சாரா உதவியதை கண்ணீர் மல்க கூறியுள்ளார். அந்த பேட்டியில் 'ஒரு மாதத்திற்கு முன் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். அப்போது எங்கள் மகள் தான் இருவரையும் உட்கார வைத்து பேசினாள். நீங்கள் ஒருவரையொருவர் பிரிந்து வாழ முடியுமா? என்று கேட்டாள். அதன்பின் நாங்கள் எங்கள் தவறை உணர்ந்தோம். தற்போது மீண்டும் கடந்த 15 நாட்களாக 20 வருடங்களுக்கு முன் எப்படி காதலித்தோமோ அப்படி காதலித்து வருகிறோம்' என்று கூறியுள்ளார். வைரலாகும் இந்த பேட்டியை பார்க்கும் பலரும் பெற்றோரை மீண்டும் சேர்த்து வைத்த சாராவின் மெச்சூரிட்டியை பாராட்டி வருகின்றனர்.