செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த கனிகா, சின்னத்திரையில் 'எதிர்நீச்சல்' தொடரில் நடித்து வருகிறார். கனிகா சினிமாவில் நடித்த போது இருந்த ரசிகர்களை காட்டிலும் இப்போது தான் அவருக்கு அதிக ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் கனிகாவுக்கு 1 மில்லியன் பாலோவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் காலில் கட்டுடன் கனிகா வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கணுக்காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கனிகா, காலில் பெரிய கட்டுடன் வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இதைபார்த்து பதறிப்போன ரசிகர்கள் கனிகாவுக்கு சீக்கிரம் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.