'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் அறிமுகமான பைவ் ஸ்டார் என்ற முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் கனிகா. அதன்பின் தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் டாப் ஹீரோயின்கள் பட்டியலில் கனிகாவுக்கு இடம் கிடைக்கவில்லை. திருமணமாகி 12 வயதில் மகன் இருந்தாலும் இந்த வயதிலும் தன்னை பிட்டாக வைத்திருக்கும் கனிகா அடிக்கடி வொர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு டிரெண்டிங்கில் இடம்பிடிப்பார்.
அண்மையில் மாடர்ன் உடையில் கனிகா வெளியிட்டிருந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அவரை மீண்டும் ஹீரோயினாக நடிக்க சொல்லி கமெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில், கனிகா தற்போது ஹார்லி டேவிட்சன் பைக் மேல் ஏறி உட்கார்ந்து கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். 40 வயதை அடைந்துள்ள கனிகா இன்றும் இளைய தலைமுறை ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அழகியாக இருக்கிறார். கனிகா தற்போது 'எதிர்நீச்சல்' தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.