மார்ச் 29ல் ‛பொன்னியின் செல்வன் 2' டிரைலர் ரிலீஸ் | 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் சத்யராஜ் - ஷோபனா | கீர்த்தி சுரேஷின் பாட்டில் சேலஞ்சை நிறைவேற்றிய நானி - ராணா | நிதின் - ராஷ்மிகா படத்தை துவக்கி வைத்த சிரஞ்சீவி | அப்பா பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ் | ஐஸ்வர்யா ரஜினியிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம் | செல்பி : போலீசாருக்காக காரை விட்டு இறங்கி வந்த ரஜினி | மும்பையில் குடியேறிய சூர்யா? | மூளையில் ரத்தக்கசிவு : லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட் | தெலுங்கில் பிசியாகும் ஐஸ்வர்யா மேனன் |
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக அறியப்பட்டவர்களில் நடிகர் ஷாமும் ஒருவர். 12பி படத்தில் நாயகனாக அறிமுகமாகி உள்ளம் கேட்குமே, லேசா லேசா, இயற்கை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு என நடித்து வரும் ஷாம் நடிப்பில் கடைசியாக 6 மெழுகுவர்த்தகள் படம் வெளியானது. மிகவும் கஷ்டப்பட்டு உடல்வருத்தி இந்த படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பின் விஜய்யின் வாரிசு படத்தில் அவரது சகோதரராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவர் தினமலருக்கு அளித்த பேட்டி...
வாரிசு படத்தில் உங்கள் ரோல்?
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யின் சகோதரராக நடித்துள்ளேன். மற்றொரு சகோதரராக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். படப்பிடிப்பில் நிறைய கற்றுக்கொண்டோம். எனது கதாபாத்திரம் படத்தில் முக்கியமானது தான். என்னை விஜய் என பார்க்காமல், நானும் ஒரு கதாபாத்திரம், நீயும் ஒரு கதாபாத்திரம் அவ்வளவுதான். உனக்கு எது சரியோ அதை மட்டும் செய் என நல்லா ஊக்கப்படுத்தினார். கிக் படத்தில் நடித்ததற்காக விஜய் என்னை பாராட்டினார். அதன்பிறகு விஜய் வீட்டிற்கு சென்று டின்னர் சாப்பிட்டிருக்கிறேன்.
படத்தில் ராஷ்மிகாவுக்கும் உங்களுக்குமான காட்சிகள் இருக்கின்றதா?
படத்தில் ராஷ்மிகா உடனான என்னுடைய காட்சிகள் இல்லை. ராஷ்மிகா - விஜய் காட்சிகள் தனிப்பட்ட டிராக்காக இருக்கும். சரத்குமார், விஜய், நான், ஸ்ரீகாந்த் ஆகியோரின் கதாபாத்திரங்கள் முக்கியமாக இருக்கும்.
வாரிசு படம் எமோஷனல், சென்டிமெண்ட் படமா?
மாஸான காட்சிகள் எல்லாம் படத்தில் இருக்கிறது. ஆனால், இது எந்தமாதிரியான படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பு போன்றவற்றை டிரைலரில் வெளிப்படுத்த இயக்குனர் வம்சி நினைத்தார்.
தெலுங்கில் நடித்து வரும் நீங்கள், தமிழில் ஏன் அதிகமான படங்களில் நடிப்பதில்லை?
வெங்கட்பிரபுவின் ‛பார்ட்டி' படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப்படம் சில பிரச்னையால் வெளியாகவில்லை. அதன்பிறகு கோவிட் பாதிப்பால் மொத்த சினிமாவும் முடங்கியது. அந்த வகையில் ‛வாரிசு' எனக்கு நல்ல வாய்ப்பாக கிடைத்தது. தற்போது விஜய் மில்டன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறேன். 2019, 2020ல் திட்டமிட்டிருந்த படங்கள் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு துவங்கலாம்.
6 மெழுகுவர்த்திகள் படம் சரியாக போகாதது பற்றி..
ஒரு படத்திற்கு முழு முயற்சி எடுத்து நடித்து, அதனை வெளிப்படுத்த முடியும். ஆனால், வந்ததற்கு பிறகு அப்படம் ஏன் சரியாக போகவில்லை என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால், அதுப்பற்றி பேசினால் வேறொரு கதைக்கு போய்விடும்.
2013 காலக்கட்டத்தில் சமூக வலைதளம் இப்போது உள்ள அளவிற்கு இல்லை. ஒரு விஷயம் இப்போதெல்லாம் உடனடியாக பரவுகிறது. ஒருவேலை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இப்போதும் நான் எங்கு சென்றாலும், அந்த படத்தில் நல்லா நடிச்சுருந்தீங்கனு சொல்வது தான் ஊக்கமாக இன்னும் நல்லா நடிக்க வைக்கிறது எனத் தோன்றுகிறது.
இந்த படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளீர்களா?
இருவரும் சேர்ந்து நடனம் ஆடவில்லை, ஆனால் நிறைய மோதல் இருக்கிறது.
ஆரம்பக்கட்டத்தில் நடிகையுடன் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலானது. ஆனால் இப்போது அப்படியில்லையே...
நான் சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் அதுபோன்ற காட்சிகள் எனக்கு வேண்டாம்.
படங்கள் தயாரிக்கும் திட்டம்...
பரத் என்பவர் இயக்கும் படத்தை நான் தயாரிக்க உள்ளேன். ஏப்ரலில் படப்பிடிப்பு துவங்குகிறது. அதிலும் எனக்கு சவால் அளிக்கும் வகையிலான கதாபாத்திரம்.