'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛சாகுந்தலம்'. பன்மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம் மகாகவி காளிதாசர் எழுதிய புராண கதையான சாகுந்தலம் கதையை அடிப்படையாக வைத்து உருவாகி உள்ளது. இதில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்த்தாக தேவ் மோகனும் நடித்துள்ளனர். பிப்., 17ல் திரைக்கு வரும் இந்த படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் இன்று(ஜன., 9) வெளியானது.
ஐதராபாத்தில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சமந்தாவும் பங்கேற்றார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தாலும் இந்த பட புரொமோஷனில் அவர் பங்கேற்றுள்ளார். விழாவில் பேசிய இயக்குனர் குணசேகரன்: ‛‛இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான்'' என்று பாராட்டினார். அதைக்கேட்ட சமந்தா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.
பின்னர் பேசிய சமந்தா, ‛‛எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் எப்படியும் பங்கேற்க வேண்டும்'' என வந்ததாக கூறினார்.