தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் சாகுந்தலம். சரித்திர கதையில் உருவான இந்த படம் 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு கடைசியாக ஏப்ரல் 14ஆம் தேதியை உறுதி செய்தார்கள். ஆனால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை கொடுத்திருக்கிறது. முதல் நாளில் நான்கு கோடி வசூலித்த இந்த படம், அதற்கு அடுத்த நாள் 1.5 கோடி வசூலித்தது. இந்த நிலையில் நேற்று வெறும் 60 லட்சம் மட்டுமே இப்படம் வசூலித்து படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுவரை மொத்தமாக ரூ.10 கோடி வசூலை மட்டுமே எட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்த சமந்தா கடும் அப்செட்டில் இருப்பதாக டோலிவுட் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.