நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் சாகுந்தலம். புராண காவியமாக சாகுந்தலத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானாலும் அதை ஈடுகட்ட தவறி தோல்வியை தழுவியது. அதேசமயம் இந்த படம் தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியாக உருவாக்கப்பட்டது என்கிற பாராட்டுக்களை பெறவும் தவறவில்லை. அந்த வகையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்கிற விருது இந்த படத்தில் பணியாற்றிய ஆடை வடிவமைப்பாளர் நீட்டா லுல்லாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பலரும் நினைப்பது போல இது கேன்ஸ் திரைப்பட விழா (Festival de cannes) கிடையாது. கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் தான் (Cannes World Film Festival) சாகுந்தலம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1985லிருந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் நீட்டா லுல்லா 300 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக மூன்று முறை சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். புராண படமாக உருவாகிய சாகுந்தலம் படத்தில் அந்த காலகட்டத்திற்கு ஏற்ப ஆடைகளை வடிவமைத்து கொடுத்த இவருக்கு தற்போது கிடைத்துள்ள இந்த கேன்ஸ் திரைப்பட விருது மிகப்பெரிய அங்கீகாரம் என்றே சொல்லலாம்.