ரஜினி என்ற ஒரு பெயருக்காகதான் நடிக்கிறேன் : கன்னட நடிகர் உபேந்திரா | வெற்றி தீபம்... ஜனநாயகத்தின் ஒளி... : அரசியல் படமா... ‛விஜய் 69' | திருமண சடங்கான மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட மேகா ஆகாஷ் | ‛வேட்டையன்' படம் பற்றி மஞ்சு வாரியர் என்ன சொல்கிறார் | அரசியல் பேசும் சசிக்குமாரின் நந்தன் : டிரைலர் வெளியானது | மீண்டும் ஜோடி சேரும் விஜய், பூஜா ஹெக்டே | என் தந்தையே எனது மிகப்பெரிய விமர்சகர் : பாடகி டூ நடிகை த்வானி பனுஷாலி பேட்டி | ஸ்பெயின் பறக்கும் ‛குட் பேட் அக்லி' படக்குழு | மீண்டும் தனுஷ் இயக்கத்தில் ராஜ் கிரண் | பிரதர் படத்தின் டப்பிங் பணியை முடித்த ஜெயம் ரவி |
மலையாளத்தில் வெளியான பிரேமம் என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாய்பல்லவி. அந்த ஒரே படத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமான இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு படங்களில் நடித்துள்ள சாய் பல்லவிக்கு அங்கே மிகப்பெரிய ரசிகர் வட்டமே இருக்கிறது. இந்த நிலையில் இவரது அழகாலும் நடனத்தாலும் இவர் மீது மிகப்பெரிய அளவில் ஈர்ப்பில் இருக்கிறார் பாலிவுட் நடிகரான குல்ஷன் தேவய்யா என்பவர்.
கடந்த 13 ஆண்டுகளாக ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள குல்ஷன் தேவய்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சாய்பல்லவி பற்றி பேசும்போது, “சாய்பல்லவி மீது எனக்கு நீண்ட நாட்களாகவே மிகப்பெரிய அளவில் கிரஷ் இருக்கிறது. அவரது தொலைபேசி எண் கூட என்னிடம் இருக்கிறது. ஆனால் அவரை அணுகுவதற்கு என்னிடம் துணிச்சல் இல்லை. அவர் ஒரு அற்புதமான நடிகை மற்றும் டான்சர். இது வெறும் கிரஷ் மட்டும் என்றே நான் நினைக்கிறேன். அதைத்தாண்டி எதுவும் இல்லை. ஆனாலும் சில நேரங்களில் அவர் மீது அதிக அளவில் ஈர்க்கப்பட்டு விடுகிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியுள்ளார்.
நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே திருமணமாகி 8 வருட மண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2020ல் தனது மனைவியை பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.