தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது |
குணசேகர் இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'சாகுந்தலம்' படம் தெலுங்கில் தயாராகி தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளிவந்தது.
சுமார் 70 கோடி ரூபாய் செலவில் தயாரானதாக சொல்லப்பட்ட இப்படம் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மொத்தமாக 10 கோடியை மட்டுமே இப்படம் வசூலித்ததாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கில் மட்டும் 5 கோடி வரை வசூலித்துள்ளதாம். கடந்த வாரம் ஓடிடியில் இப்படம் வெளியாகி உள்ளது. ஓடிடி உரிமை ஓரளவுக்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அதன் மூலம் கொஞ்சம் நஷ்டம் குறைந்துள்ளது.
தெலுங்கில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான சமந்தா நடித்த இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்காதது தெலுங்குத் திரையுலகினரிடம் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமந்தா தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக தெலுங்கில் 'குஷி' படத்தில் நடித்து வருகிறார்.