டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' |
யானை, சினம் படங்களை தொடர்ந்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தில் எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் தொடங்கியது. அதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அச்சம் என்பது இல்லையே படத்தின் சண்டைக் காட்சியில் நடித்தபோது அருண் விஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள அருண் விஜய், சண்டை காட்சிகளில் நடிக்கும்போது எத்தனை முறை காயம் ஏற்பட்டாலும் அதைப்பொருட்படுத்துவதில்லை. சொந்தமாக டூப் பயன்படுத்தாமல் சண்டைக்காட்சியில் நடிப்பதையே நான் விரும்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.