சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் 67வது படத்தையும் இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், பிருத்விராஜ், மிஷ்கின், திரிஷா, சமந்தா உள்பட பல பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. தற்போது இந்த படம் ஹாலிவுட்டில் வெளியான எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படத்தின் ரீமேக் என்று ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்தின் கதையை தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் மாற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்கோ மோர் டென்சன் நாயகனாக நடித்த எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படம் சாதாரண குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் நாயகன் வன்முறை சம்பவத்தில் எதிர்பாராத விதமாக ஈடுபட, அதன் பிறகு அவனது வாழ்க்கை கேங்ஸ்டர் ஆக மாறும் கதையில் உருவாகி உள்ளது. இந்த கதையில் தனது யூனிவர்ஸ் கேரக்டர்களையும் இணைத்து புதிய கோணத்தில் லோகேஷ் கனகராஜ் படமாக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.