2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவின் எவர் கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்தவர் ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அதன்பிறகு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காதவர் தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கப் போகிறார். இந்த படத்தை பேயை காணோம் என்ற படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்குகிறார். வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முக்கியமாக, இந்த பழனிச்சாமி வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.