சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி |
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மலையாள நடிகர் நரேன். அதைத்தொடர்ந்து அஞ்சாதே, முகமூடி, கத்துக்குட்டி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் மலையாளத்திலும் பிசியான நடிகராக நடித்து வருகிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி, விக்ரம் ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் முன்பை விட தற்போது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் நரேன். சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த யூகி என்கிற திரைப்படம் வெளியானது.
கடந்த 2007ல் மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நரேன். அவர்களுக்கு 14 வயதில் தன்மாயா என்கிற மகள் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த தகவலை குழந்தையின் விரல்கள் மட்டும் தெரியும் விதமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தெரியப்படுத்தியுள்ளார் நரேன்.