அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழில் பிக்பாஸ் சீசன் 6 மற்ற சீசன்களை காட்டிலும் ஆரம்பம் முதலே சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. சீசன் தொடங்கி சிறிது நாட்களுக்கு பிறகு மைனா நந்தினி என்ட்ரி கொடுத்துள்ளார். அவரும் தனது கேமை சிறப்பாக விளையாடி வருகிறார். அவருக்கு ஆதராவாகவும், எதிராகவும் இணையதளங்களில் குரல் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மைனா நந்தினி குறித்து மற்றொரு சுவாரசியமான தகவலும் உலா வருகிறது. அதாவது பிக்பாஸ் வீட்டில் முதலில் களமிறங்கிய 20 போட்டியாளர்களில் ஏடிகேவும் ஒருவர். தனது கூலான ஆட்டிடியூடால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் மைனா நந்தினியின் உறவினர் என்றும் மைனா நந்தினிக்கு ஏடிகே மாமன் மகன் உறவுமுறை வேண்டும் என்றும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.
ஆனால், பிக்பாஸ் வீட்டிலோ மைனாவும் ஏடிகேவும் தங்களை ஒருவருக்கொருவர் தெரியாதது போலவே நடந்து கொள்கிறார்கள். ஒருவேளை உறவினர்கள் என்று காட்டிக்கொள்ளாமல் விளையாடுவது இருவரது கேம் ஸ்ட்ரேட்டஜியாக இருக்கலாம் எனவும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.