''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்து இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமாகிவிட்டார். வாட்ஸப்பில் கூட இவருக்காக ஸ்டிக்கர் ஆப்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. டிக்டாக் செயலி தடைசெய்யப்பட்ட பிறகு யூ-டியூப் மூலம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஜி.பி. முத்துவுக்கு ஆரம்பத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறு சிறு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜி.பி. முத்துவுக்கு தற்போது மிகப்பெரிய லக் அடித்துள்ளது.
விக்னேஷ் சிவன் - அஜித் இணையும் புதிய படத்தில் நடிப்பதற்கு ஜி.பி.முத்துவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே இதுநாள் வரை சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த ஜி.பி.முத்துவுக்கு இது நிச்சயமாக பெரிய வாய்ப்பு தான். இதுஒருபுறமிருக்க, அரசியல் தளத்திலும் அவர் டிரெண்டாகி வருகிறார். அதாவது ஜி.பி.முத்து வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், 'என் தாத்தா, என் அப்பா என் அம்மா என்று என் பரம்பரையே அதிமுக தான். எனக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவை ரொம்ப புடிக்கும். இரும்பு பெண்மணி. அவர் இறந்தபோது நான் அழுதேன்' என பேசியிருந்தார்.
தற்போது இந்த வீடியோவை அதிமுக தொண்டர்கள் வைரல் செய்து வருகின்றனர். இவ்வாறாக ஜி.பி. முத்து அரசியல் மற்றும் சினிமா தளங்களில் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார். ஜி.பி.முத்துவின் இந்த வளர்ச்சியை ரசிகர்கள் பலரும் சோஷியல் மீடியாக்களில் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.