செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஜி.பி.முத்துவுடன் இணைந்து டிக் டாக் செய்த மெளன ராகம் ரவீனாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
மொபைல் ஸ்கிரீனில் கலாட்டாக்களை செய்து கொண்டிருந்த ஜி.பி.முத்து, சமீபகாலங்களில் சின்னத்திரை, வெள்ளித்திரை என மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார். அந்த வகையில் விஜய் டிவியில் நடைபெறும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெளன ராகம் தொடரில் நடித்து வரும் ரவீனா, ஜி.பி. முத்துவுடன் இணைந்து டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஜி.பி.முத்து பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவரின் டிரேட்மார்க் வசனமான நாக்கு என்ற வசனத்தை சொல்லுமாறு ரவீனா செய்கை செய்தார். மேலும், இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக நாக்கு என்று கமெண்ட் செய்திருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் அவருடன் சேர்ந்து கொண்டு நீங்களும் இப்படி செய்யலாமா? என கழுவி ஊற்றி வருகின்றனர்.