குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களின் ஆதரவோடு 7 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. தற்போது 8வது சீசனும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனின் நடுவர்களாக அனுராதா ஸ்ரீ ராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த முடிந்த எபிசோடில் ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டார்.
ஸ்ரீதர் சேனாவின் வெளியேற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலரும் நடுவர்களை கடுமையாக குற்றம் சாட்டி பதிவிட்டு வருகின்றனர். இதனால் மனமுடைந்த நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்” என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.