போர்ஷே கார் உடன் ரேஸ் களத்தில் அஜித் : தமிழக அரசின் SDAT லோகோவும் அச்சிடல் | விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி நேரில் ஆஜர் | தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் | நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு |
நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு, தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் அவரிடம் நலம் விசாரித்து வருவதுடன் அவர் விரைவில் குணம்பெற பிரார்த்தித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் சீடன், பாகமதி ஆகிய படங்களில் நடித்தவர்.
யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் உன்னிமுகுந்தன் கூறும்போது, “இந்த படத்தில் நான் ஏன் நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். அதனால் அதுபற்றி இப்போது அதிகம் பேச விரும்பவில்லை. சமந்தா இந்த படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். படப்பிடிப்பில் என்னுடனும், படக்குழுவினருடனும் கலகலப்பாக சிரித்து பேசியபடி தான் இருப்பார். ஆனால் ஒருநாள் கூட நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த ஒரு கஷ்டத்தையும் அவர் வெளிக்காட்டியதே இல்லை. அதுபற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டதும் இல்லை. அந்த அளவிற்கு அவர் தொழிலையும் பர்சனல் விஷயங்களையும் தனித்தனியாக பிரித்து வைத்து இருந்தார்” என்று கூறியுள்ளார்.