தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு ஏன் - தமன்னா பதில் | சந்தானம் பட இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி | கனிமொழிக்கும் எனக்குமிடையே 20 ஆண்டுகால நட்பு : சொல்கிறார் ஐஸ்வர்யா ரஜினி | திருப்பதி கோவிலில் ஜோதிகா வழிபாடு | 15 ஆண்டு காதலை உறுதிப்படுத்திய கீர்த்தி சுரேஷ் | மாரி செல்வராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | சிவகார்த்திகேயன் படம் : ஜெயம் ரவி போட்ட கண்டிஷன் | நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்: பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | மலையாள சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு : சுஹாசினி திடீர் குற்றச்சாட்டு | நானும் கட்சி தொடங்குவேன் : பார்த்திபன் சொல்கிறார் |
சென்னை : விஜய் நடித்துள்ள வாரிசு படத்தில் வெளியாகி உள்ள ‛ரஞ்சிதமே...' பாடல் 'மொச்ச கொட்ட பல்லழகி' உள்ளிட்ட சில பாடல்களில் இருந்து காப்பி அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளிவந்தது. விஜய்யின் முந்தைய படப் பாடல்களின் சாதனைகளை முறியடிக்கவில்லை என்றாலும் இப்பாடல் யு டியூபில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து டிரென்டிங்கிலும் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.
இருப்பினும் 'ரஞ்சிதமே' பாடல் சில பல பாடல்களின் காப்பி என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. குறிப்பாக சிற்பி இசையமைப்பில், ஜி சேகரன் இயக்கத்தில் ராம்கி, வினிதா மற்றும் பலர் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளிவந்த 'உளவாளி' திரைப்படத்தில் இடம் பெற்ற 'மொச்ச கொட்ட பல்லழகி' என்ற பாடலின் காப்பியாக உள்ளது என சமூக வலைத்தளங்களில் பரவியது. அதனால், அந்தப் பாடலை கூகுளிலும், யு டியுபிலும் ரசிகர்கள் அதிகமாகத் தேடியுள்ளனர். அந்தப் பாடலுக்கான பார்வை எண்ணிக்கையும், கமெண்ட்டுகளும் தற்போது திடீரென உயர்ந்துவிட்டது.
அது மட்டுமல்ல தெலுங்கில் தமன் இசையமைக்க, ரவி தேஜா, ஸ்ருதிஹாசன் நடனமாடிய 'கிராக்' படத்தில் இடம் பெற்ற 'மாஸ் பிரியாணி' பாடலில் உள்ள இடையிசை, தமன் இசையமைத்த மற்றொரு தெலுங்குப் படமான 'அகாண்டா' படத்தில் பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால் நடனமாடிய 'ஜெய் பாலய்யா' பாடலின் இடையிசை ஆகியவற்றையும் பயன்படுத்தியுள்ளார் என்பதும் கூடுதல் சமூக வலைத்தளத் தகவல்.
இவற்றோடு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கார்த்தி நடித்து வெளிவந்த 'பருத்தி வீரன்' படத்தில் இடம் பெற்ற 'ஊரோரம் புளிய மரம்' பாடலில் வரும் இடையிசை, சிம்பு நடித்த யுவனின் மற்றொரு படமான சிலம்பாட்டம் படத்தில் வரும் நலம்தானா பாடலில் வரும் இடையிசை என சில பல பாடல்களைக் கலந்து காப்பியடித்துதான் 'ரஞ்சிதமே' பாடலை தமன் உருவாக்கியுள்ளார் என பல வீடியோக்களும் யு டியுபில் வெளியாகி உள்ளன.
காப்பி என்று சொல்லப்பட்டாலும் யு டியூபில் 'ரஞ்சிதமே' பாடலுக்கான பார்வை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. 'வாரிசு' படத்தின் மற்ற பாடல்களுக்கு தமன் எப்படி இசையமைத்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள அந்தப் பாடல்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.