சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான். அந்த அளவிற்கு 90களில் முன்னணி நடிகையாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த குஷ்பு, பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கி சினிமாவில் தயாரிப்பு நிர்வாகத்தை மட்டும் கவனித்து வருகிறார். இன்னொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்களாக தனது அறிமுகப்படமான தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து கடந்த வருடம் அண்ணாத்த படம் வரை தான் இணைந்து நடித்த, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரஜினிகாந்துடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார் குஷ்பு.
அந்தவகையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. இந்த சந்திப்பிற்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்றும் இது சூப்பர் ஸ்டாருடன் சிரித்துப்பேசி ஒரு கோப்பை தேநீர் பருகிய ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி.. நீங்கள் இப்போதும் பிரமிக்க வைக்கிறார்கள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.