விஜய்யின் 67 வது பட பூஜை: வீடியோ வெளியானது | அஜித் 62வது படத்தை இயக்கும் மகிழ்திருமேனி | வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்துள்ள 'ஆச்சார்யா' படம் கடந்த ஏப்ரல் 29ம் தேதி வெளியானது. தெலுங்கின் முன்னணி இயக்குனரான கொரடாலா சிவா இயக்கி இருந்தார். ராம்சரண் தயாரித்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஆச்சார்யா படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். படம் நஷ்டமானதையடுத்து நானும் ராம் சரணும் படத்திற்காக பெற்ற ஊதியத்தில் 80 சதவீதத்தை திருப்பி கொடுத்துவிட்டோம். ஆச்சார்யா படம் குறித்த எந்த குற்ற உணர்வும் எனக்கில்லை'' என தெரிவித்துள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள 'காட் பாதர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.