அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகியுள்ள ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற படம் கடந்த ஜூன் 27ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் அந்த படத்தின் டைட்டிலில் இடம்பெற்ற ஜானகி என்கிற பெயரை நீக்குமாறு வாய்மொழியாக அறிவுறுத்தினார்கள். ஆனால் படக்குழுவினர் அதை மறுத்து ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்பினார்கள். அங்கேயும் இதே காரணம் சொல்லப்பட்டு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
சென்சாரின் இந்த செயல் மலையாள திரை உலகில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல மலையாள இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சென்சாருக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். மேலும் இன்று (ஜூன் 30) திருவனந்தபுரத்தில் உள்ள சென்சார் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தனர். அதன்படி மலையாள தொழிலாளர் சம்மேளனம், மலையாளத் திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில் திரைப்படங்களில் கருத்து சுதந்திரத்தை கத்திரிக்க கூடாதென்று ஆவேசமாக குரல் எழுப்பிய அவர்கள் சென்சாரின் இந்த அராஜக செயலை கண்டிக்கும் விதமாக தாங்கள் கையில் கொண்டு வந்திருந்த கத்திரிக்கோல்களை அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியில் போட்டு நூதனமாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் அங்கிருந்து கொஞ்ச தூரம் ஒரு பேரணியையும் அவர்கள் நடத்தினார். இவர்களது இந்த எதிர்ப்பால் சுரேஷ் கோபியின் படத்திற்கு சரியான தீர்வு கிடைக்குமா, இல்லை மீண்டும் ட்ரிபியூனலுக்கு மறு தணிக்கைக்காக இந்த படம் அனுப்ப வேண்டிய சூழல் உருவாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




