'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியில் முன்னணி வரிசைக்கு நகர்ந்துள்ளது கன்னட சினிமா. இந்தநிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தென்னிந்திய சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர்.
கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தை இரண்டு முறை பார்த்து ரசித்துள்ளார் நடிகர் பிரபாஸ். இதுபற்றி பிரபாஸ் கூறும்போது, “காந்தாரா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன்.. என்ன ஒரு அற்புதமான அனுபவமாக அது இருந்தது.. அருமையான கான்செப்ட் மற்றும் த்ரில்லிங் க்ளைமாக்ஸ்.. கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் இது” என்று பாராட்டியுள்ளார்..