சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

படம் வெற்றி அடைந்தால் அது தன்னால்தான் என்று கொண்டாடி தீர்க்கும் ஹீரோக்கள், தோல்வி அடைந்தால் அதற்கு சம்பந்தம் இல்லாததுபோன்று அடுத்த படத்தில் பிசியாகி விடுவார்கள். இப்படியான காலகட்டத்தில் தான் நடித்த படம் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடுகட்ட தான் வாங்கிய சம்பளத்தில் 50 சதவீதத்தை திருப்பி கொடுத்துள்ளார் தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகடா.
குண்டூர் டாக்கீஸ், டிஜே தில்லு, தில்லு ஸ்கொயர் உள்பட பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சித்து ஜொன்னலகடா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜேக்'. பொம்மரிலு பாஸ்கர் இயக்கி இருந்தார். வைஷ்னவி சைதன்யா நாயகியாக நடித்திருந்தார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் வெளியாகி, தோல்வி அடைந்ததுடன் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.
இந்த படத்தில் நடித்தற்காக 10 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் சித்து ஜொன்னலகடா. இதில் ஜி.எஸ்.டி வரி போக 4.75 கோடியை திருப்பிக் கொடுத்திருக்கிறார். சித்துவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.