மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
மணிரத்னம் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன்'.
காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி என நேற்று வரையிலான விடுமுறை நாட்களில் கடந்த பத்து நாட்களாக இப்படம் தியேட்டர்களில் நிறைவான ரசிகர்களுடன் சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தது. பத்து நாட்களில் சுமார் 390 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வார முதல் நாளான திங்கள் கிழமையிலும் 60 சதவீதம் வரையில் தியேட்டர்கள் நிறைந்துள்ளன. இன்றைய வசூலுடன் இப்படம் 400 கோடி வசூலை உலக அளவில் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் மிக விரைவாக 150 கோடி வசூல், இந்திய அளவில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் 200 கோடி வசூல் என சில சாதனைகள் நடந்த நிலையில் அடுத்து உலக அளவில் ஒரு தமிழ்த் திரைப்படத்தின் விரைவான 400 கோடி வசூல் என்ற சாதனையையும் இப்படம் படைக்கப் போகிறது.