கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
'பாகுபலி' படத்திற்குப் பிறகு தெலுங்கு நடிகரான பிரபாஸ் பான் இந்தியா நடிகராக மாறினார். அதற்குப் பிறகு அவர் நடித்து வெளிவந்த 'சாஹோ, ராதேஷ்யாம்' ஆகியவை தோல்வியைத் தழுவினாலும் பிரபாஸுக்கு பிரம்மாண்ட படங்களின் வாய்ப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது.
தற்போது பிரம்மாண்டப் படங்களான 'ஆதி புருஷ், சலார், புராஜக்ட் கே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆதி புருஷ்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால், அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மாருதி இந்தப் படத்தை இயக்குகிறாராம். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் கதாநாயகிகளாக ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல். வில்லனாக நடிக்க ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசி வருகிறார்களாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தமாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.