ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் வெளியான ஐந்து நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. தற்போது வெளிநாடுகளிலும் கூட இப்படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் அப்டேட் செய்துள்ளார்கள்.
அமெரிக்கா, அரேபிய நாடுகள், இங்கிலாந்து, மலேசிய, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா என தமிழர்கள் அதிகமாக வசூலிக்கும் நாடுகளில் இப்படத்தின் வசூல் இதற்கு முன்பு வெளியான முன்னணி ஹீரோக்களின் படங்களைக் காட்டிலும் அதிகமாக வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் மட்டுமே இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும், அடுத்ததாக அரேபிய நாடுகளில் ரூ.19 கோடி வரையிலும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளிநாடுகளிலும் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடி வசூல் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த வார இறுதி நாட்களிலும் வெளிநாடுகளில் இப்படம் இன்னும் வசூலைக் குவிக்கும் என்கிறார்கள்.




