காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
தமிழில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். தற்போது ‛‛டீசல், நூறு கோடி வானவில்'' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இவர் விரைவில் திருமணம் செய்யப்போவதாக சமீபகாலமாக செய்திகள் வந்தன. இந்நிலையில் விஜயதசமி நாளில் தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்துள்ளார் ஹரிஷ். அவர் பெயர் நர்மதா என்று குறிப்பிட்டுள்ளார் ஹரிஷ்.
இதுதொடர்பாக ஹரிஷ் வெளியிட்ட செய்தி : ‛‛என்னுடைய குழந்தை பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும், பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது. இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்கிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.