ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் |

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினி வீட்டில் கேஷூவலாக அலைப்பேசியை பார்த்தபடி இருக்கும் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார் அவரது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா.
அதோடு, ‛‛இந்த போட்டோவிற்கு பில்டர் எடிட் தேவையில்லை. ஒருபோதும் தவறான கோணத்தில் இருக்க முடியாத முகம். விலைமதிப்பற்ற நேர்மறையான ஒரு போட்டோ. அப்பாவின் அன்பு. உங்கள் எல்லா நாட்களும் மேற்கண்ட வரியில் கூறப்பட்டுள்ளபடியே இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார். 
ரஜினியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. 
 
           
             
           
             
           
             
           
            