Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரஞ்சீவியைக் காப்பாற்றிய 'காட்பாதர்'

05 அக், 2022 - 17:10 IST
எழுத்தின் அளவு:
Godfater-saves-Chiranjeevi

தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஸ்டார் ஆன சிரஞ்சீவி நடிப்பில் இன்று(அக்., 5) வெளியான தெலுங்குப் படம் 'காட் பாதர்'. ஜெயம் ரவியின் அண்ணனான மோகன்ராஜ இயக்கத்தில் நயன்தாரா, சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

மலையாளத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய 'லூசிபர்' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். சிரஞ்சீவி நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ஆச்சார்யா' படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதனால், இந்தப் படத்தின் மீது சிரஞ்சீவி மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவரது நம்பிக்கையை இயக்குனர் மோகன்ராஜா, இசையமைப்பாளர் தமன் ஆகியோரும் சேர்ந்து சிறப்பான படமாகக் கொடுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரஞ்சீவி ரசிகர்களுக்கும் படம் பிடித்திருப்பதால் படம் வெற்றிப்பட வரிசையில் இணைந்துவிடும் எனச் சொல்கிறார்கள். அதே சமயம் நாகார்ஜுனா நடித்து வெளிவந்துள்ள 'த கோஸ்ட்' படத்திற்கு சுமாரான வரவேற்புதான் கிடைத்துள்ளதாம். மற்றொரு படமான 'ஸ்வாதிமுத்யம்' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய விஜயதசமி வெளியீடு போட்டியில் சிரஞ்சீவிதான் முன்னணியில் உள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
யாதும் ஊரே யாவரும் கேளீர் டிசம்பரில்  ரிலீஸ்யாதும் ஊரே யாவரும் கேளீர் ... வெளிநாடுகளிலும் ரூ.100 கோடி கடந்த 'பொன்னியின் செல்வன்' வெளிநாடுகளிலும் ரூ.100 கோடி கடந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramarajan - ARAKKONAM,இந்தியா
06 அக், 2022 - 22:31 Report Abuse
Ramarajan பில்டப்பா .
Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
05 அக், 2022 - 19:36 Report Abuse
Vijay D Ratnam ஆந்திரா தெலுங்கானாவில் சிரஞ்சீவியின் காட் பாதர், நாகார்ஜுனாவின் த கோஸ்ட் மற்றும் சுவாதிமுத்யம் மூன்று படங்களும் செம்ம ஹிட் அடிப்பதால், மூன்று படங்களுக்கும் கூட்டம் அலைமோதுகிறது. அங்குட்டு பொன்னியின் செல்வன் தியேட்டர் காலியாக இருக்கிறது. ஆனால் இங்குட்டு ஏன்னா பில்டப் கொடுத்துக்கிட்டு திரியிறாய்ங்க.
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
05 அக், 2022 - 17:36 Report Abuse
தமிழன் ரீமேக்கின் ராஜா எங்கள் ராஜாவும் இட்டிலியும்... அதனால் சிரஞ்சீவி கவலை படத் தேவையில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in