அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளியான நாளிலிருந்தே தினமும் படத்தைப் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். காலாண்டு விடுமுறை நாட்கள், ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
படம் வெளியான ஐந்து நாட்களில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'சர்க்கார், பிகில்' ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்து தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய அளவில் இப்படம் 170 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் வசூல் கடந்த ஐந்து நாட்களில் ரூ.300 கோடியைக் கடந்திருக்கும் என்றும் இந்த வார இறுதிக்குள் ரூ.500 கோடியைக் கடக்கும் என்றும் மேலும் தெரிவிக்கிறார்கள்.