'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
மலையாளத்தில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதை அம்சத்துடன், வித்தியாசமான கதைக்களத்தில் தனது படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. பெரும்பாலும் புதுமுகங்களை மட்டுமே வைத்து படம் இயக்கி வந்த இவர், தற்போது நடிகர் மம்முட்டியை கதாநாயகனாக வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இவர் சொன்ன கதை பிடித்துப்போய் உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்த மம்முட்டி, இந்த படத்தை தானே தயாரிக்கவும் செய்கிறார். இந்த படம் தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் மம்முட்டி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண கிராமத்து மனிதனாக நடித்துள்ளார். அவர் கிராமத்து திண்ணையில் தலைக்கு கைகளை வைத்து படுத்து உறங்குவது போல இதற்கு முன்பு வெளியான புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.. இந்தநிலையில் தற்போது இன்னும் மாட்டுச்சாணம் மூலம் வரட்டி தட்டி அவற்றை சுவற்றில் காய வைக்கும் தமிழக கிராமத்து தெரு ஒன்றில், லுங்கியை மடித்துக்கொண்டு பழைய டிவிஎஸ் எக்ஸெல் வண்டியை மம்முட்டி ஓட்டி வருவது போன்று ஒரு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஒரு பக்கம் அதிரடி கேங்ஸ்டர், அதிரடி போலீஸ் அதிகாரி என நடித்து வரும் மம்முட்டியின் இந்த சராசரி மனிதன் அவதாரம் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது.