ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி நடிப்பில் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . ஜெயமோகன் எழுதிய விடுதலை என்ற சிறுகதையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது . இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார்.
இந்த நிலையில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: கார்த்தியுடன் நடித்துள்ள 'விருமன்' படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது, வெற்றிமாறன் இயக்கும் ‛விடுதலை' படத்தில் நடித்து வருகிறேன். இதில் கதையின் நாயகனாக நடிக்கிறேன். இதன் கதையை இயக்குனர் வெற்றிமாறன் சொல்லும்போது, ‛இந்த கேரக்டர் நமக்கு இருக்குமோ, அந்த கேரக்டரில் நடிக்க வேண்டியிருக்குமோ?' என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ‛நீங்கள்தான் கதையின் நாயகன்' என்று அவர் சொன்னதும் மகிழ்ச்சியை உடனடியாக வெளிப்படுத்த முடியவில்லை.
அவர் படத்தில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை. படப்பிடிப்பில் அவர் இயக்கத்தைப் பார்த்து வியக்கிறேன். அவர் சிறந்த இயக்குனர் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படத்தில் நானே எனக்கு வேறொருவனாகத் தெரிகிறேன். இதில், கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் காமெடியன் சூரி என்பதே என் அடையாளம், அதை விடமாட்டேன்' என்றார்.