ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் ‛யோஹான் அத்தியாயம்' ஒன்று என்ற படத்தை இயக்க தயாரானார் கவுதம் மேனன். அந்தப் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்போவதாக அவர் அறிவித்தார். ஆனபோதிலும் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே படத்தின் மொத்த கதையையும் கவுதம் மேனன் தன்னிடத்தில் சொல்லாததால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய். அதன் காரணமாகவே யோஹான் அத்தியாயம் ஒன்று படம் அப்போதைக்கு கைவிடப்பட்டது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கமலஹாசன், அஜித் குமார், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி விட்ட கவுதம் மேனன், ரஜினி, விஜய் ஆகிய இருவரையும் வைத்து இதுவரை படம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் அவர் இணைந்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்க போகிறார்கள். ஏற்கனவே ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் தமிழ் நடிகர் அர்ஜுன், மலையாள நடிகர் பிருத்திவிராஜ் ஆகியோர் கமிட்டாகி உள்ள நிலையில் தற்போது கவுதம் மேனனும் இன்னொரு வில்லன் வேடத்தில் நடிக்க இப்படத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் விஜய்யுடன் இயக்குனராக இணைய முடியாத கவுதம் மேனன் இப்போது அவர் படத்தில் வில்லனாக இணைந்திருக்கிறார்.




