'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ருத்ரன். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ருத்ரன் படம் குறித்து இயக்குனர் கதிரேசன் கூறுகையில், இந்த படம் 60% ஆக்சன் காட்சியில் உருவாகியிருக்கிறது. இப்படத்திற்காக 10 கிலோ எடையை அதிகரித்து நடித்துள்ள ராகவா லாரன்ஸ், பின்னர் காட்சிகளுக்காக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் மற்றும் லாரன்ஸ் இடையே பல அதிரடியான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் அதிரடி சண்டைக்காட்சிகள் நிறைந்த படமாகவும், இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் வித்தியாசமானதாகவும் இப்படம் இருக்கும். சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு சாதாரண மனிதனைப் பற்றிய கதையில் உருவாகி இருக்கிறது. தீமை பிறப்பதில்லை, படைக்கப்படுகிறது என்பது தான் இப்படத்தில் டேக் லைன் என்று கூறுகிறார்.