21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' | 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'மீரா' | ரம்பாவுக்குப் பிறகு ரகுல் ப்ரீத்…இப்படி ஒரு கிளாமர் !! | நவம்பர் 7ல் சிறிய படங்களின் வெளியீடுகள் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட அறிவிப்புக்கு பிரம்மாண்ட விழா | இரண்டே நாட்களில் 30 கோடி வசூலித்த 'பாகுபலி த எபிக்' | அடுத்த ஆண்டு ஜூனில் தனுஷ் - மாரி செல்வராஜ் இணையும் பிரமாண்ட படம்! | ஷாருக்கானின் 60வது பிறந்தநாளில் வெளியான கிங் படத்தின் டீசர்! | நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் |

முந்தானை முடிச்சு படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான கோவை சரளா தென்னிந்திய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பிறகு தற்போது பிரபு சாலமான் இயக்கும் செம்பி படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். தனது பேத்திக்கு நடந்த ஒரு அநியாத்துக்கு பழிவாங்கும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. செம்பி என்கிற மலைவாழ் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் அவருடன் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருப்பதை தொடர்ந்து படக்குழுவினர் கமல்ஹாசனை சந்தித்தனர். அப்போது அவருக்கு படத்தின் டீசரை போட்டு காண்பித்தனர். பின்னர் கமல் படக்குழுவினரை வாழ்த்தினர். இந்த சந்திப்பு கோவை சரளாவின் ஏற்பாட்டின் பேரில் நடந்தது. சதிலீலாவதிக்கு பிறகு கதையின் நாயகியாக நடித்திருப்பதால் கமலை சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதால் இந்த சந்திப்பு நடந்தது.