எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஜுன் மாதத்தில் பள்ளிகள் திறப்பதால் படங்களை வெளியிட வேண்டாம் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்துவிட்டார்களோ என்று யோசிக்க வைக்கிறது. இந்த ஜுன் மாதத்தின் கடந்த இரண்டு வாரங்களில் ஜுன் 3ம் தேதி கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படமும், 'அகண்டன்' என்ற படமும் மட்டுமே வெளிவந்தது.
கடந்த வாரம் ஜுன் 10ம் தேதி டப்பிங் படங்களான '777 சார்லி, அடடே சுந்தரா' ஆகிய படங்கள் வெளிவந்தன. இப்படங்களுக்கு எந்த விதமான பிரமோஷனையும் இரண்டு படங்களின் குழுவினருமே செய்யவில்லை. '777 சார்லி' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தன. ஆனால், அவற்றை தங்கள் படத்திற்கான வரவேற்பாக அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. 'அடடே சுந்தரா' படத்திற்கு பத்திரிகையாளர் காட்சி கூட நடத்தவில்லை. அவர்களே படத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை.
இந்த வாரமாவது சில படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ் நடித்துள்ள 'வீட்ல விசேஷம்' படம் மட்டுமே வெளிவருகிறது. 'விக்ரம்' படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் அதனுடன் போட்டி போடுவதைத் தவிர்த்து தங்களது வெளியீட்டை தள்ளி வைத்துக் கொண்டது 'யானை'. கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் மகிழ்ந்து கொண்டது படக்குழு. இதனால் எந்த போட்டியும் இல்லாமல் 'வீட்ல விசேஷம்' படம் வருகிறது.
ஓடிடியில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஓ 2' படம் வெளியாகிறது. அதே சமயம் அடுத்த வாரம் ஜுன் 24ம் தேதி ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.